Wednesday, September 18, 2013

நீங்களும் கப்பல் பார்க்கப் போனீர்களா !?


             கொழும்புத் துறைமுகத்தை 'லோகோஸ் ஹோப் ' எனும் கப்பல் புத்தகங்களை சுமந்து ஆல் கடலில் ஒரு அறிவுச் சுரங்க வடிவில் வந்திருக்கின்றது. இக்கப்பல் வருவது இதுதான் முதற் தடவையல்ல .இலவசமாக சென்று ரசித்து புத்தகங்கள் உட்பட பல பொருட்களை  கொள்வனவு செய்துவர மக்கள் வெள்ளமும் அலை மோதுகிறது . இந்த முஸ்லீம் உம்மத்தும் நிறையவே செல்கிறது .


                        முதலில் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் .புத்தகங்களை விற்கும் இலாபத்தை நோக்கமாக வைத்து இந்தக் கப்பல் வரவில்லை அந்த விடயமே ஒரு பக்குவமான முகமூடி ! அது ஒரு அகீதாவின் உருவத்தை நாகரீகம் ,நடத்தை , அபிமானம்,சமூக உதவி  என்ற போர்வைக்குள் புகுத்தி பொதுநலன் என்ற வெளிப்பார்வையோடு வந்துள்ளது .

               "அவர்கள் வந்தபோது அவர்கள் கையில் 'பைபிள்' இருந்தது .  எமது கையில் தேசம் இருந்தது .எம்மை கண்ணை மூடி ஜெபிக்கச் சொன்னார்கள் . பின் கண்ணை திறந்து பார்த்த போது எம் கையில் பைபிள் இருந்தது அவர்கள் கையில் தேசம் இருந்தது ! இந்த ஆபிரிக்கக் கவி வடிவம் ஒரு தெளிவான விடயத்தை குறித்து நிற்கிறது .

               முதலாளித்துவ சித்தாந்தம் 'செக்கியூலரிச ' வடிவில் மதத்தையும் 
வாழ்வையும் பிரித்து வைத்தாலும் கிறிஸ்தவ மதத்தோடு அதன் பற்றுள்ள பார்வை ,விசுவாசம் மாறவே மாறாது . பரலோகத்தில் இறைவனின் எல்லையை  வைத்து விட்டு பூலோகத்தில் எத்தகு வாழ்வையும் வாழலாம் . சர்ச்சுக்குள் சென்று பாவமன்னிப்பு கேட்டால் போதுமானது . பாவச் சுமையை இன்னொருவர் சுமப்பார் ! 

            அற்புதமான இந்த கொள்கை சுயநலம் பிடித்த குள்ள நரிகளின் கழுத்திலும் சிலுவையை தொங்கப் போட்டதில் ஆச்சரியம் இல்லைதான் .இவர்கள் செல்லுமிடமெல்லாம் இந்த கிறிஸ்தவத்தையும் கொண்டு செல்வார்கள் . இந்த மதம் இவர்களது சுயநல வாழ்வில் தலையிடாது .மாறாக  தேவைக்கு  உதவும். இவர்கள் அடித்தாலும் மறுபக்கம் அணைக்கும் கரமாக இந்த முதலாளிகளுக்கு மதம் 'சப்போர்ட்' ஆகியது .

                   அரசியல் அற்ற அரசியலும்  ,சிலபோது அரசுக்குள் ஒரு அரசாகவும் !  கிறிஸ்தவம் இருக்கும் .உதாரணமாக   பண்டைய சிலுவைப்போருக்கும் நவீன 'போஸ்னியா ' WAR இற்கும் இடையில் அரசியலாக அது கிறிஸ்தவர்களை இயக்க வில்லையா !?   

                          இன்னொரு புறம் அரச சார்பற்ற குழுக்கள் மூலம் SOFT HAND வேதங்களாக   இந்த கிறிஸ்தவ மதத்தை பயன் படுத்தியே  சிந்தனை யுத்தத்தை முழு உலகிலும் ,இஸ்லாத்தின் பூமியிலும்  இந்த முதலாளித்துவ வாதிகள் சிறப்பாக முன்வைத்தனர் வென்றனர் . எனவேதான் இவர்களது 'மிசனரிகளுக்கு' இராஜ தந்திர பாதுகாப்பு முழு உலகிலும்  சாதாரணமாகவே கிடைத்து விடுகிறது .' ஜெனரல் சீசி ' யும் பரக் ஒபாமாவும் இத்தகு சிந்தனா வடிவத்தில் தான் ஒன்றானவர்கள் .

                    அப்படி ஒரு கப்பல் தான் நீங்கள் பார்த்து ரசித்து, சிந்தனை வயப்பட கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது . அதாவது 'மிசனறிக் கப்பல் ! சிந்தனை மாற்றத்துக்கான புதிய விதைகளை விநியோகிப்பார்கள். நாம் வீசிவிட்டு சென்றாலும் எங்காவது சிலது முளைக்கும் . முதலாளித்துவ வாழ்வியலுக்கு சாதகமாக . பள்ளி வாசலில் தேசியக்கொடி ஏற்றியது வரை அவர்கள் தந்து நாம் ஜீரணித்த சிந்தனை தானே !

         

No comments:

Post a Comment